வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

0
61

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளராக விளங்கி வரும் பூம்ராவின் சமீபத்தைய சொதப்பல்கள் குறித்து சக பந்து வீச்சாளர் ஷமி ஆதங்கமாகப் பேசியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

சமீபத்தில்தான் காயத்தில் இருந்து மீண்ட பூம்ரா, நியுசிலாந்து தொடரில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். மூன்றாவது டி 20 போட்டியில் களமிறங்கிய அவர் 5 ஆவது டி 20 போட்டியில் மட்டுமே 3 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பந்து வீசினார். அதே போல ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் அவரது பவுலிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூட பூம்ரா களத்தில் தயக்கம் இல்லாமல் ரிஸ்க் எடுத்து பந்து வீச வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இந்நிலையில் பூம்ராவின் சக வீரரான முகமது ஷமி, இது குறித்து வேறு கோணத்தில் பேசியுள்ளார். அவர் ‘வெறும் 3 அல்லது 4 போட்டிகளை வைத்து நீங்கள் பூம்ராவின் திறமையை சந்தேகப்பட கூடாது. கடந்த ஆண்டுகளில் நாம் அவரால் எத்தனை போட்டிகளை வென்றுள்ளோம் எனப் பார்க்க வேண்டும். நீங்கள் பும்ரா திறமை குறித்து நேர்மறையாகச் சிந்தித்தால், அது அவருக்கு நல்லவிதமாக அமைந்து, அவரின் நம்பிக்கையை மேலும் வளர்க்கும். ஒரு விளையாட்டு வீரர் காயம் படும் போது அவரின் நேர்மறையான விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K