பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை !

0
96

பார்முக்கு வந்த ஷமி & பூம்ரா! இந்தியா 7 ரன்கள் முன்னிலை !

நியுசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் இளம் தொடக்க ஜோடியான பிருத் வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்  இறங்கினர். மயங்க் அகர்வால், கோலி, ரஹானே ஆகியோர் மோசமான ஷாட்கள் விளையாடி அவ்ட் ஆகி ஏமாற்றம் அளிக்க பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடியது. கிட்டத்தட்ட 23 ஓவர்கள் ஆடிய நிலையில் இந்திய அணியினரால் ஒரு விக்கெட் கூட வீழத்த முடியவில்லை. ஆட்ட முடிவில் நியுசிலாந்து விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்தது. டாம் லாதம் 27 ரன்களுடனும் பிளண்டல் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வலுவான நிலையில் இருந்த நியுசிலாந்தை இந்திய பவுலர்கள் தங்கள் அபாரமான பவுலிங்கால் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லாதம்மை தவிர மற்றவர்கள் அனைவரையும் நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. இதனால் நியுசிலாந்து அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜேமிசன் நிலைத்து நின்று ஆடி அந்த அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட வைத்தார். இதனால் நியுசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய அணி சார்பில் ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

author avatar
Parthipan K