இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

0
102

இந்திய பவுலர்களின் போராட்டம் வீணாகுமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா !

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இந்திய அணியின் பிருத்வி ஷா (54), புஜாரா(55) மற்றும் ஹனுமா விஹாரி (51) ஆகியோர் அரைசதத்தால் இந்தியா 242 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லாதம் 52 ரன்களும் ஜேமிசன் 49 ரன்களும் சேர்த்தனர். சிறப்பாக பந்து வீசிய ஷமி 4 விக்கெட்களும், பூம்ரா 3 விக்கெட்களும், ஜடேஜா 2 விக்கெட்களும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய மிகவும் பரிதாப கரமாக விளையாடி வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 90 ரன்களுக்கு 6  விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது பண்ட் 1 ரன்னுடனும் விஹாரி 5 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர். இதனால் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. எதேனும் அதிசயம் நடந்தாலொழிய இந்திய அணி மீள்வது சாத்தியமில்லை.

author avatar
Parthipan K