ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

0
173
Brother sister marriage to get a visa! Police net!
Brother sister marriage to get a visa! Police net!

ஒரு விசா பெறுவதற்கு அண்ணன் தங்கை திருமணம்! போலீசார் வலை வீச்சு!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்.அங்கு தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால் மற்றொருவருக்கு விசா கிடைப்பது மிகவும் சுலபமான ஒன்றாகும்.அதனால் அந்த வாலிபர் அவருடைய சகோதரிக்கு விசா பெற இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதனால் அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்துள்ளனர்.

அதனையடுத்து அங்கு அருகில் உள்ள பதிவு அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.அதன் பிறகு அந்த பெண் கணவருடன் ஆஸ்திரேலியா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.அதன்படி அவர் விசா பெற்று கணவருடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் இரண்டு நாட்டு சட்ட அமைப்புகளையும் ஏமாற்றியது தெரியவந்தது.

மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் அவர்கள் இருக்கும் இடம் பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை அதனால் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அந்த பெண் போலி ஆவணங்கள் தயாரித்து விசா பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.குடியேற்ற ஊழலில் சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K