இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கு! மே மாதம் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிமன்றம்!

0
66

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக யாருக்கு சொந்தம் என்று மிகப் பெரிய பிரச்சனை எழுந்தது. இதில் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கினார்.அதோடு அவர் அதிமுக எப்போதுமே அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வசமே இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன்பிறகு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பன்னீர்செல்வம் அவர்களும், ஒன்றிணைந்து கட்சியை தங்கள் வசப்படுத்தினார்கள்.

இதற்கு முன்னதாக இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று விவாதம் எழுந்தது, அப்போது மரணமடைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. அந்த தொகுதியில் யார் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று இதுதொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பல கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டை இலை சின்னம் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது தேர்தல் ஆணையம்.இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது அதிமுக என்று தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்பு இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், குமார் மல்லிகார்ஜுன், உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை பரிசீலனை செய்த டெல்லி உயர் நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்த வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விசாரணையை மே மாதம் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.