பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

0
141

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற் பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.
பிரம்மஹத்தி தோஷம் தரும் விளைவு

சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும்
திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.
நல்லறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்வி ஏற்படும்.

பரிகார ஸ்தலங்கள்

இதற்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக உள்ளது.

  • பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது சிவபெருமானால் பாண்டிய மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவா கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படுகிறது.

    இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

குறிப்பு : பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய அனுச நட்சத்திரம் அன்று காலையில் மட்டுமே செய்ய வேண்டும்.

  • இது செய்ய முடியாதவர்கள் இராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில் கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற முடியும். இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம். இராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்.

    நல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய், இலுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். பழமையான சிவாலயத்திற்கு சென்று ,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்.

பிரம்ம ஹத்தி தோஷம் பலிக்காதபடி இருக்கும் கிரக நிலை ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் இருந்து செவ்வாய் தொடர்பிருந்தால் பரிகாரம் உடனே பலிதமாகாது. இவர்கள் பிரசன்ன ஜோதிடரரை அணுகி தோஷநிவர்த்தி செய்து கொள்ளவும்.

author avatar
Parthipan K