Connect with us

Breaking News

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

Published

on

Breaking: தீபாவளி மறுநாள் பொது விடுமுறை! அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

வரும் திங்கட்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவிருக்கும் நிலையில்,அக்டோபர் 23,24 தேதிகளில் அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது.
இந்நிலையில் வெளியூர் சென்று திரும்பும் மக்கள் தீபாவளி முடிந்து மறுநாளே பணிகளுக்கும்,
பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்வதில் சிரமம் இருப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் தீபாவளி மறுநாளான அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமையன்று பொது விடுமுறை அளிக்க வேண்டுமென்று அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தீபாவளி மறுநாள் விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது அக்டோபர் 25 தேதியன்று பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 25ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி விடுமுறை அளிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகவும்,22 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு தரப்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் தீபாவளி மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பார்க்கப்படுகிறது.

Advertisement