Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

0
137
Positive verdict for EPS side! Supporters in celebration!
Positive verdict for EPS side! Supporters in celebration!

Breaking: இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு! கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!

அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது.பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமித்தனர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்களை இபிஎஸ் நீக்கினார். இவ்வாறு பொதுக்குழு கூட்டம் தன் அனுமதி இன்றி நடைபெற்றதாகவும் அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்தது ஒப்புக்கொள்ள முடியாது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அந்த வகையில் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வத்தின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து  ஓபிஎஸ் செய்தியாளர்களிடம், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை செயல்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார். இதற்கு முற்றிலுமாக எடப்பாடி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. ஜூலை பதினொன்றாம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி ஜெயசந்திதிரனின் உத்தரவை ரத்து செய்து இன்பதுரை  தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடும் , அதிமுக விதிகளின்படியும்  இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ,சேலத்து சிங்கம் ,நிரந்தர பொது செயலாளர் என தொண்டர்கள் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்புக்கு இது பெரும் அடியாகவே இருக்கும் என அரசியல் சுற்றுவட்டரங்கள் கூறுகின்றனர்..