#breaking news: முக்கிய அறிவிப்பு 30 மணிநேரம் தளர்வுகள் இன்றி முழுஊரடங்கு? மீறுவோருக்கு கடுமையான தண்டனை!

0
77

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியவாறு:

சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6 மணி வரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.இதன்படி நாளை,பால் வினியோகம்,மெடிக்கல் ஷாப்,மருத்துவமனைகள்,
அவசர சிகிச்சை வாகனங்கள்,இதைத் தவிர எந்த விதமான வாகன செயல்பாடுகளுக்கும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அனுமதி கிடையாது.

இதனை மீறி அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும்,தேவையின்றி கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டுமென்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகின்றது.அவசர தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை மீறும் வாகனங்கள் மீது குற்றவியல் பிரிவு 144-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Pavithra