முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு!

0
66
Breaking News!! Central government extension for ration card holders!
Breaking News!! Central government extension for ration card holders!

முக்கிய அறிவிப்பு!! ரேசன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு கால நீட்டிப்பு!

பொது விநியோக மேலாண்மை  முறையில் ரேசன் அல்லது பயோ மெட்ரிக் முறையில் நாட்டில் எங்கு வேணுமானாலும் பொருட்களை வாங்க அளிக்கப்பட்ட நிதிக்கான ஒப்புதல் மேலாண்மை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.இது பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள விவரம்;

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேசன் அட்டை மூலம் மலிவு விலையில் தானியங்கள் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் வாழ்வாதாரத்தை  இழந்த சாமானிய மக்கள் இன்று வரை ரேஷன் அட்டை மூலம் இலவச பொருட்களை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் நியாயவிலை கடைகளில் தகுதியற்ற நபர்கள் பொருட்கள் வாங்கி செல்வதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டை எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும் இணைத்தால் மட்டுமே ரேசன் பொருட்கள் பெற முடியும் என  ஆணை பிறப்பித்தது.

இதில் தற்போது ஒருங்கிணைந்த ஒரே நாடு,ஒரே ரேசன் அட்டை திட்டத்தின் மூலம் புலம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவரும் தங்களுடைய உணவு தானியங்களை தற்போது உள்ள ரேசன் அட்டை அல்லது பயோ மெட்ரிக் அங்கீகாரம் பெற்ற ஆதார் எண்ணை கொண்டு நாட்டில் உள்ள எந்த நியாய விலைக்கடைகளிலும் மாதந்திர உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்.என சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவித்து இருந்தார்.

இதற்கென ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை முறையில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.127.3 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட நிலையில், இந்த திட்டமானது மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் மூலம் தற்போது மாதந்தோறும் சராசரியாக 3.5 கோடிக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது.

2020-2021, 2021-2022, 2022-2023  ஆகிய நிதி ஆண்டுகளின் போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தேசிய தகவல் மையங்கள்,தேசிய தகவல் மைய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இதுவரை  ரூ.46.86 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 93.31 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வுக்காக 167பண்பலை வானொலிகள் மற்றும்  91 சமுதாய வானொலிகளில் ஒலி-ஒளி காட்சி, நியாயவிலை கடைகள் மற்றும் பொது இடங்களில் பதாகைகள் ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வு      ஏற்படுத்தப்பட்டுள்ளது. 13 மொழிகளில் உள்ள மேரா ரேசன் என்ற செயலியை இதுவரை 20 இலட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.