Connect with us

Breaking News

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!

Published

on

Breaking: All these important political decisions are in the hands of the Prime Minister's wife .. The minister who spilled the truth!!

Breaking: இந்த அரசியல் முக்கிய முடிவுகள் அனைத்தும் முதல்வரின் மனைவி கையில் தான் .. உண்மையை உளறி கொட்டிய அமைச்சர்!!

முதல்வரின் தூக்கத்தை கெடுப்பதே இந்த மூத்த அமைச்சர்களாக தான் உள்ளார்கள். ஏனென்றால் ஏதேனும் பொது இடத்தில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் பல சர்ச்சைகளும் உருவாகிவிடுகிறது. இதனை சமாளிப்பதற்குள்ளையே முதல்வர் ஒர் வழி ஆகி விடுகிறார். அந்த வகையில் இறுதியாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், பொதுமக்கள் நிறைந்த சபையில் பெண்கள் ஓஸி பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என்று கூறியது பொது மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

Advertisement

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தாக தங்களது பேச்சுக்களால் மக்களிடம் பல அவதூறு பெயர்களை சம்பாதிப்பதையே அமைச்சர்கள் வேலையாக வைத்திருந்த பொழுது, முதல்வர் வாயை அடக்கிப் பேசுமாறு கண்டித்தார்.அவ்வாறு கண்டிப்பாக கூறிய பொழுதும் இந்த அமைச்சர்கள் திருந்திய பாடில்லை. அந்த வகையில் சமீப காலமாக அரசியல் ரீதியான முடிவுகள் எடுப்பதில் முதல்வரின் குடும்பம் சம்பந்தப்படுவதாகவும்,ஆலோசனை வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்தது.

இது குறித்து மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சருமான துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?? என்று கூறிவிட்டு, ஸ்டாலின் அவர்கள் வசிக்கும் சாலையின் பெயரை கூறி அங்கு சென்று கேளுங்கள் என தெரிவித்தார். இதுவே பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் என்னிடம் ஏதும் கேட்காதீர்கள் என்று கூறி அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை.

Advertisement

அதற்கு மாறாக ஸ்டாலின் வசிக்கும் சாலையின் பெயரை ஏன் கூற வேண்டும், இதில் ஏதோ உள்ளது என பலரும் அரசல் புரசலாக பேசி வந்தனர். அந்த வகையில் இதனை நிரூபிக்கும் விதமாக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் மனைவியை புகழ்வது என நினைத்து அமைச்சர் பொன்முடி அவர்கள் உளறி தள்ளியுள்ளார்.

அதில் முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கொடுக்கும் திறமை மிக்கவர் துர்கா ஸ்டாலின் என கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.இவ்வாறு அவர் கூறி உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதை வைத்துப் பார்க்கையில் தற்பொழுது அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு கூட ஸ்டாலின் குடும்பம் பின்னணியில் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. தற்பொழுது பொன்முடி மீண்டும் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டதால் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகுவார் என்று அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Advertisement