சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

0
71

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பு மருந்தினை நாங்கள் வாங்க மாட்டோம் பிரேசில் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தான் ஒரே வழி என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதன்படி உலகில் உள்ள பல நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் ஒரு சில நாடுகள் கொரோனா தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனையில் ஈடுபட்டு உள்ளன. இதனால், இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மற்ற நாடுகளைப் போல சீனா கண்டுபிடித்த தடுப்பு மருந்தும் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கப் போவது இல்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அறிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ஒருவர், சீனாவின் தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பதில் அளித்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, சீனாவின் தடுப்பு மருந்தை நிச்சயமாக வாங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K