பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ!

0
111

பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ!

பிரண்டை வற்றல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றும் ஞாபகசக்தியை பெருக்கும் மேலும் மூளை நரம்புகளை பலப்படுத்தும் பிறகு எலும்புகளுக்கு சக்தி தரும். அது மட்டுமல்லாமல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். பிரண்டையால் ஆன உணவை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும்.

பிரண்டை வற்றலுக்கு தேவையான பொருட்கள் : அரிசி அரை கிலோ,பொடியாக நறுக்கி பிரண்டைகால் கிலோ , காய்ந்த மிளகாய் மூன்று, மூன்று பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் ,பெருங்காயத் தூள் ஒரு டீஸ்பூன் உப்பு தேவையான அளவு மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

பிரண்டைவற்றல் செய்முறை : முதலில் அரிசியை கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.

பின்பு வதக்கியவற்றை நன்கு ஆற வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் குழைய வேக வைத்துள்ள சாதத்துடன், அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.

மேலும் இதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதன் அனைத்தையும் நன்றாக கலந்து, சிறிய நெல்லிக்காய் அளவுக்கு, சிறிது சிறிதாக ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, 4 அல்லது 5 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், காய வைத்துள்ள வற்றலைப் போட்டு பொரித்தெடுத்தால் பிரண்டை வற்றல் தயாராகிவிடும். குழந்தைகள் பிரண்டை சட்னியை அதிகம் விரும்ப மாட்டார்கள் அதனால் இவ்வாறு வற்றல் செய்து கொடுத்தால் உணவுடன் சேர்த்து மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் உண்பார்கள்.

 

மேலும் இந்த பிரண்டை வற்றலை தயிர் சாதம், சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

author avatar
Parthipan K