எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த தகவல்கள்!

0
150
Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!
Boys caught in SSI murder case! Information revealed in the secret investigation!

எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் பிடிபட்ட சிறுவர்கள்! ரகசிய விசாரணையில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள்!

திருச்சி, புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதனை ஆடு திருடுபவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்  அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையை பகிரங்கப்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு சந்தை வெளியே சேர்ந்தவர் எஸ்.பூமிநாதன். 51 வயதான இவர் திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

மகன் குகன் பிரசாத் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பூமிநாதன் மற்றும் சித்திரவேல் இருவரும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது பூலாங்குடி அருகே நான்கு பேர் இரண்டு இரு சக்கர வாகனங்களின் மூலம் வந்தனர். அவர்கள் ஆடு ஒன்றையும் கையில் வைத்திருந்தனர்.

எனவே அவர்களிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரிக்க முற்படும் போது அவர்கள் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுவிட்டனர். திருடர்களுக்கு இது வழக்கம் தானே, போலீசாரை கண்டால் தப்பித்து ஓடுவது. இதையடுத்து பூமிநாதன் மற்றும் சித்திரவேல் இருவரும் அவர்களது இருசக்கர வாகனத்தின் மூலம் தனித்தனியாக அவர்களை துரத்த ஆரம்பித்தனர்.

போலீசார் பின்தொடர்ந்து வருவதை பார்த்த நான்கு பேரும் வெவ்வேறு சாலைகளின் மூலம் தப்பி ஓட முயற்சித்தனர். அதன் காரணமாக ஆடு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சித்திரவேல் அவருடைய வாகனத்தை ஓட்ட முடியாத காரணத்தினால் பின் தங்கி விட்டார்.

ஆனால் பூமிநாதன் அவர்களை விடாமல் விரட்டிச் சென்று திருவெறும்பூர் – கீரனூர் சாலையில் திருச்சி மாவட்ட எல்லை தாண்டி, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதி வரையிலும் விரட்டிச் சென்று உள்ளார். கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் இருந்து, திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார் சாலையில் இருந்த 54 A என்ற ரயில்வே சுரங்கப் பாதையில் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி இருந்தது.

அதனால் அதற்கு மேல் திருடர்களால் செல்ல முடியவில்லை. எனவே இருவரும் பூமிநாதனிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களை மடக்கிப் பிடித்த பூமிநாதன் அதன் பிறகு உடன் வந்த சித்திரவேலை தொடர்பு கொண்டு உடனே அங்கு வருமாறு கூறினார். ஆனால் இருட்டில் வழி தெரியாமல் சென்ற அவர், சேறும் சகதியுமான ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டு விட்டார்.

இதையடுத்து தன்னுடன் பணிபுரியும் மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளரான கீரனூர் கணேஷ் நகரில் வசிக்கும் சேகருக்கு பூமிநாதன் தகவல் தெரிவித்து, விரைவாக அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன் பிறகு அங்கு வந்த சேகர் தலையில் வெட்டுக் காயங்களுடன் பூமிநாதன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இது குறித்து நாவல்பட்டு போலீசாருக்கும், கீரனூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டார். இந்த வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. மேலும் தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடம் அருகே உள்ள பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை இன்று தனிப்படை போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், டிஐஜி.சரவணசுந்தர், திருச்சி எஸ்.பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கொலை செய்யப்பட்டு இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும் இந்த கொலை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும் போது, பூமிநாதனிடம் சிக்கியவர்கள் ஆடு திருடர்கள் என்பதும், அவர்கள் தான் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதும் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் மேலும் கூறும்போது, திருடர்களை பிடித்த பூமிநாதன், உதவிக்கு போலீசார் வருவதற்காக  காத்திருந்தார்.

அப்போது திருடர்கள் இரண்டு பேரும் தப்ப முயன்றுள்ளனர். அவர்களிடம் தனியாளாக பூமிநாதன் போராடியுள்ளார். அதன் பிறகு அந்த திருடர்கள் தங்களது வசம் வைத்திருந்த ஆடு வெட்டும் கத்தியை கொண்டு பூமிநாதன் தலையில் பின் பக்கமாக வெட்டியுள்ளனர். அதன்பிறகு அங்கிருந்து தப்பி உள்ளனர். மேலும் குற்றவாளிகள் தூக்கி எறிந்த பூமிநாதனின் தொப்பி, வாக்கி டாக்கி, செல்போன் ஆகியவை மீட்கப்பட்டு உள்ளது என்றனர்.

அதன்பிறகு பூமிநாதன் சோழமா தேவி கிராமத்தில் நேற்று மாலை 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.