தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் வாரம் தோறும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

0
58

சென்னை சைதாப்பேட்டை சேஷாசலம் தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக இணை நோயுடன் இருக்கின்ற 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு வீடுகளுக்கு சென்று அவனை தடுப்பூசிகள் செலுத்தும் பணியை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்திருக்கிறார்.

அந்த சமயத்தில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்டோர் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார்.

அந்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் இதுவரையில் 92, 522 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.

சென்னையை பொருத்தவரையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் தண்டையார்பேட்டை நோய்த்தொற்று மருத்துவமனை உள்ளிட்ட 160 பகுதிகளில் நடைபெற இருக்கிறது. அதோடு மற்ற மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், உள்ளிட்ட 440 பகுதிகளில் என்று ஒட்டுமொத்தமாக 600 பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

நாட்டில் நோய் தொற்று பரவல் 20 சதவீதத்தை கடந்து இருக்கிறது,. தமிழ்நாட்டில் மட்டும் தான் 16 முதல் 18 சதவீதம் நோய்த்தொற்று பரவல் இருக்கிறது. தமிழகத்தில் குறைவான மதிப்பு என்ற அளவில் இருந்தாலும் நோய்த் தொற்று பாதிப்பு கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 2,000 என்ற அளவில் உயர்ந்து வந்தது.

நேற்று முன்தினம் நோய்த்தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவில் குறைந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வந்தால் எதிர்வரும் நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று தோன்றுகிறது என கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.