இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்!

0
77
These are half bonuses! Sudden announcement by the Central Government!
These are half bonuses! Sudden announcement by the Central Government!

இந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் போனஸ்!அரசாங்கம் வெளியிட்ட விவரங்கள்!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் அதன் சிறப்பு கேற்ப பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவதுதான் தீபாவளி.இந்த பண்டிகையில் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வர். சென்ற ஆண்டு கரோனா காலகட்டம் என்பதால் பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தனர். அதேபோல பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு நேர அவகாசம் கொடுத்திருந்தனர்.இந்த வருடம் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.

அதனால் இவ்வருடமும் டெல்லி போன்ற இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை செய்துள்ளனர். ஏனென்றால் தொற்று பாதித்தவர்கள் பட்டாசு வெடிப்பது நாள் வரும் புகையை சுவாசிக்க நேரிட்டால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.அதனால் பல இடங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.விற்பதற்கும் தடை விதித்துள்ளனர்.தீபாவளி பண்டிகையின் போது அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் போனஸ் வழங்கப்படும். அந்த வகையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எந்தெந்த பிரிவினருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பி பிரிவு ஊழியர்கள் மற்றும் பி பிரிவில் உள்ள நான் கெசட் பிரிவினருக்கும் போனஸ் வழங்கப்படும் என்று கூறி உள்ளனர். மேலும் உற்பத்தி சாராத அடிப்படையில் இந்த போனஸ் வழங்கப்படும் என்று பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தப் பிரிவின் கீழ் ராணுவ படையினரும் ,ஆயுத படையினரும் போனஸ் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும். அதுமட்டுமின்றி மார்ச் 31 2011 வரை பணியில் இருந்த மற்றும் மார்ச் 2009 முதல் 2011 வரையான நிதியாண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தொடர்ச்சியாக பணியில் இருந்தவர்களுக்கு தற்காலிக போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அதேபோல சீ குழுவான உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் அனைத்து கெசட் அல்லாத ஊழியர்களான B தரப்பினருக்கும் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் பணியிலிருந்த போதே ராஜினாமா செய்தவர்கள் மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அவர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மார்ச் 31 க்கும் முன்பு பணி காலாவதியான ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஊழியர்களின் அடிப்படையில் ஓய்வு பெற்ற அல்லது மார்ச் 31 க்கு முன்பு இறந்த ஊழியர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.