வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

0
59

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட யானையின் சடலம்! கடும் நிலச்சரிவால் உயிரிழப்பு!

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது.இதனால் கேரளாவில் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. எர்ணாகுளத்தில் நேரியமங்கலம் என்ற பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அதில் யானையின் சடலம் ஒன்று மிதந்து போனது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு உள்ள தேயிலை குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சிக்கிக் கொண்டன. அதனால் அங்கிருந்த 80 பேரை காணவில்லை என்ற தகவல் மனதை பிசைகிறது. மேலும் 5 பேர் வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன்,

தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.மிகவும் வலிமை மிகுந்த மீட்பு படையினர் 50க்கும் மேற்பட்டோரை மீட்பு பணியில் ஈடுபட செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவிலும் அவர்கள் பணிபுரியும் வகையில் அவர்களுக்கு உபகரணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும். குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். பதிவிட்டு அவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Kowsalya