புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!

0
115
Boat bridge overturns in Puducherry, tourists drown in river
Boat bridge overturns in Puducherry, tourists drown in river
புதுச்சேரியில் படகு பாலம் கவிழ்ந்து விபத்து சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளிப்பு!!
புதுச்சேரியில் படகு பாலம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் மூழ்கி தத்தளித்து வந்த நிலையில் 10 சுற்றுலா பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று பகுதியில் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பாரடைஸ் பீச்(Paradise Beach) செயல்பட்டு வருகின்றது. இந்த பாரடைஸ் பீச் அதாவது இந்த கடலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கு சுண்ணாம்பாற்று பகுதியில் இருந்து படகு சவாரி செயல்பட்டு வருகின்றது.
இந்த பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படகு சவாரி மூலம் தினமும் சென்று வருகின்றனர். இதற்கு என சுண்ணாம்பாற்று பகுதியில் மரத்தினால் ஆன பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று அதாவது மே 20 சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையிலேயே  ஏராளமானோர் பாரடைஸ் பீச்சுக்கு செல்வதற்கு படகு சவாரி செய்ய படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அனைவரும் பாரடைஸ் பீச்சுக்கு சென்ற பிறகு மாலையில் படகு குழாமுக்கு திரும்புவதற்கு காத்திருந்தனர்.
அந்த சமயத்தில் படகில் செல்வதற்கு ஒரே நேரத்தில் மரத்தினால் ஆன அந்த பாலத்தின் மீது 20 பேரும் ஏறினர். பாரம் தாங்காமல் மரப்பாலம் திடீரென்று சரிந்து ஆற்றுக்குள் உள்வாங்கியது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதனால் பதட்டமும் பரபரப்பும் அங்கு ஏற்பட்டது.
ஆற்றில் விழுந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட படகு குழாம் ஊழியர்கள் தண்ணீரில் தத்தளித்த அனைவரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. சேதமடைந்த அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.