இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

0
61
Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!
Bleaching rain in these 11 districts !! Information released by the Meteorological Center!

இந்த 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை!! வானிலை ஆய்வு மையம் வெளிட்ட தகவல்!

ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம்தான். ஆனால் இம்முறை சென்ற ஆண்டைவிட நவம்பர் மாதமே அதிக அளவில் மழை பெய்து விட்டது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உண்டானது. குறிப்பாக சென்னையில், வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி இந்த பருவமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முடிக்க வேண்டிய பாடங்கள் தற்பொழுது வரை நிலுவையில் தொடரப்பட்டு வருகிறது. இதனையடுத்து வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த வடகிழக்கு பருவமழை யானது டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை தொடரும் என கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி டிசம்பர் மாதத்தில் ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகள் அதிகளவு பாதிப்பை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர். தெற்கு கர்நாடகா ,தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் வருடாந்தர இயல்பை விட அதிக அளவு மழை பொழிவு காணப்படும் என கூறியுள்ளனர்.

கேரளாவிலும் இதே நிலை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். இப்பொழுது பொதிந்துள்ள பருவமழையால் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. அதேபோல டிசம்பர் மாதமும் இயல்பை விட அதிகப்படியான மழைப்பொழிவு காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. அந்த வகையில் பார்க்கும் பொழுது 132 சதவீதத்திற்கும் மேல் இம்முறை  மழைப்பொழிவு காணப்படும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளனர்.

மேலும் வட மற்றும் மத்திய இந்தியாவில் மழைபொலிவு குறைந்து காணப்படும் என்று கூறினர். இதன் முதல் தாக்கமாக வரும் 5-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள நீலகிரி ,கோவை, சேலம் ,தர்மபுரி ,நெல்லை,ஈரோடு ,தேனி மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பொழிவு காணப்படும் என்று சென்னை வானிலை மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். சில மாவட்டங்களில் இம்மழை 4ஆம் தேதி ஆரம்பித்து விடும் என்று கூறியுள்ளனர். அதேபோல புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருப்பதன் மூலம் வரும் பேரிடரிலிருந்து காத்துக்கொள்ளலாம்.