கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்? சமூக ஆர்வலர்கள்!

0
59

கருப்பு வெள்ளை டிவியின் விலை 30 லட்சம்?சமூக ஆர்வலர்கள்

1985-86 ஆம் ஆண்டுகளில்  கருப்பு – வெள்ளை டெலிவிஷனை பயன்படுத்தி வந்தனர்.அந்த காலகட்டத்தில் இந்த டிவி வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர்கள். மத்திய அரசின் தூர்தர்ஷன் முதன் முதலில் அந்தக் கருப்பு வெள்ளை டிவியில் ஒளிபரப்பப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7.30 ஒலிபரப்பாகும் ‘ஒளியும் ஒலியும்’ என்ற  நிகழ்ச்சியில் ஒருப்பட பாடல்கள் ஒளிபரப்பாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரே ஒரு திரைப்படம் வெளியிடப்படும்.

ஊராட்சிக்கு ஒரு டிவியும் இருக்கும்.வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சிகளை காண ஊர் மக்களே ஓரிடத்தில் கூடி பார்ப்பர்.தற்போது டெக்னாலஜி வளர்ச்சியால் ஸ்மார்ட் டிவி வரைக்கும் வந்து விட்டது.இந்நிலையில் இந்த கருப்பு வெள்ளை டிவி,மியூசியத்தில் வைக்கும் பொருள் போன்று மாறி விட்டது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கருப்பு வெள்ளை டிவி குறித்து ஒரு பெரும் வதந்தி வாட்ஸ் அப்பில் உலாவி வருகிறது.கருப்பு வெள்ளை டிவி தயாரிக்க ஒரு பாதரசம் பயன்படுத்தப்படுவதாகவும்,
அந்தப் பாதரசத்தின் தற்போதைய விலை 30 லட்சம் லட்சம் என்றும் வதந்தி ஒன்று பரவியது.இந்த கருப்பு வெள்ளை டிவியை வைத்திருப்பவர்கள் 30 லட்சத்திற்கு விற்கலாம் என்றும் ஒரு வதந்தி பரவி வருகின்றது.இந்த வதந்தியை நம்பி கருப்பு வெள்ளை டிவி வைத்திருப்போரும்,கொள்ளைக் கும்பலும் அலை மோதி வருகின்றன.

கோபுர கலசத்தில் இரிடியம் இருப்பதாக கருதி அதை எப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை கும்பல் திருட முயன்றனரோ அதுபோன்று தற்போது கருப்பு வெள்ளை டிவியும் திருட ஒரு கொள்ளைக் கும்பல் அலைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது.இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும்,ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்றும்,பொது மக்களுக்கு மிகவும் விழிப்புணர்வு தேவை என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.மேலும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சமூக ஆர்வலர் சார்பில் அறிவுறுத்தப்படுகின்றனர்.

author avatar
Pavithra