அள்ளி வழங்கிய மத்திய அரசு! சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கை!

0
67

எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கும் கால சிறப்பு அறிவிப்புகளையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியீடு செய்திருக்கிறார்.

தமிழ்நாடு, கேரளா ,அசாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், அதனை கருத்தில் வைத்து இந்த வருடம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கிற மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் 1.73 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை அறிவித்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .மதுரை கொல்லம் சாலை மற்றும் சித்தூர் தாட்சூர் சாலை போன்றவை அந்த அறிவிப்பில் அடங்கும் எதிர்வரும் வருடத்தில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சென்னையில் ரூபாய் 63 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். திருச்சி சென்னை விசாகப்பட்டினம் மற்றும் 35 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக திகழும் என்று தெரிவித்திருக்கிறார். முதல் தடவை மும்பை கன்னியாகுமரி 25 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கல்கத்தா சரி செய்யும் திட்டம் உள்பட 1700 கிலோமீட்டர் வரையில் நெடுஞ்சாலை திட்டப்பணிகளை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அசாம் மாநிலத்தில் தற்சமயம் ரூபாய் 19,000 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் மூன்று வருடங்களில் அசாம் மாநிலத்தில் 1300 கிலோ மீட்டருக்கும் மேல் ஆன தேசிய நெடுஞ்சாலைகளை கொண்ட 34 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் சர்வ தேச ஒற்றுமை தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்புகள் எல்லாம் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை கருத்தில் வைத்தே வெளியிடப்பட்டு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகிறார்கள்.