இக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!

0
75

ஊடகங்கள் தங்களுடைய கடமையைச் செய்ய பாஜக தொண்டர்கள் உறுதுணையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக பாஜக தலைமையகத்தில் பெண் ஒருவர் மயக்கமடைந்ததை உலகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயற்சித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் ,அதனை தொடர்ந்து ஏற்பட்ட சலசலப்பையும் அனைத்து தரப்பிலும் விசாரித்து அறிந்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக தன்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

எதிர்பாராமல் நடைபெறும் இது போன்ற நிகழ்வின்போது தான், கண்ணியம் காத்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு பாஜகவின் பெருமையை எல்லோரும் நிலை நாட்ட வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் மற்றும் தொண்டுப் பணிகளில் கற்பனைப்புடன் செயல்படும் தொண்டர்கள் எல்லோரும் ஊடக மேலாண்மையையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அண்ணா மலை.

ஊடகங்களுக்கு துணை நின்றால் அவர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

அதோடு கடமை செய்யும் ஊடகத்தையும் கவனிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று பாஜகவின் தொண்டர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.