கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

0
170
VCK Thirumavalavan
VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

சென்னை

தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா?

ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் தலைமைகளும் நியமனமானது. தமிழகத்திலும் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டது.

பாஜகவில் பிராமணர்கள் ஆதிக்கம் 

பிராமணர்கள் அல்லாத அதேசமயம், மக்களிடம் பிரபலமான நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பொறுப்பு தர ஆரம்பித்தது பாஜக. பொன்னார் முதல் தமிழிசை வரை அந்த பதவிகளை அலங்கரித்தனர்..

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக எச்.ராஜா, எஸ்வி.சேகர் போன்றோரை கொண்டு வருவதைவிட, எல்.முருகன், அண்ணாமலை போன்றோரை நியமிக்கும் மேலிடத்தின் முடிவுக்கு பின்னால் நிற்கும் சமூக அரசியல் எதை உணர்த்துகிறது? என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.

அப்படித்தான், தமிழக பாஜக தலைவராக தலித்தான கிருபாநிதி நியமனம் செய்யப்பட்டார். ஆனால், பிராமணர் தலைவர்களின் ஆதிக்கத்தால், அவர் அந்த பதவியைவிட்டே போய்விட்டார்.

பாஜகவில் தலித் தலைவர்

அதற்கு பிறகு, அதே தலித் சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகன் தலைவரானார். அடுத்தடுத்த அதிகாரங்கள் எல்.முருகனுக்கு வந்து சேர்ந்தன என்றாலும், தலித் வாக்குகளை பாஜக தன் பக்கம் குவித்துள்ளதா? என்பது சந்தேகம்தான்.

எல் முருகன் வழியில் அண்ணாமலை.. திடீரென நடந்த மாற்றங்கள்.. கவனித்தீர்களா! |  BJP state President Annamalai Follows the footpaths of Union Minister of  State L.Murugan - Tamil Oneindia

பாஜகவில், தலித் என்ற பதவியே, மேம்போக்காக தரப்பட்ட ஒரு போஸ்ட்டிங்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்கான ஒரு யுக்தியாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் மக்களிடம் ஒரு புரிதல் இருக்கவே செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், தலித் தலைவர்கள் என்பதையும் தாண்டி, பாஜக, அதன் மூலஅமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் பிடியில் இருப்பதை அனைவரும் நன்கு அறிந்தே உள்ளனர்.

அதனால்தான், வேல் யாத்திரை முதல் அம்பேத்கருக்கு காவி கலர் பூசும்வரை, யுக்திகள் எடுக்கப்பட்டும், அது மக்களிடம் பெரிதாக எடுபடாமலேயே போய்விடுகிறது.. இதைதான் திருமாவளவன் தன்னுடைய ஒவ்வொரு மேடைகளிலும் சுட்டிக்காட்டி வருகிறார். கூட்டணி அரசியல் என்பதையும் தாண்டி, பாஜகவிடம் கவனமாக இருக்கும்படி, அதிமுகவையும் அடிக்கடி அலர்ட் செய்தும் வருகிறார்.

திருமாவளவன் பாஜக எதிர்ப்பு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சனாதனமா? சனநாயகமா? என்கிற கோட்பாட்டை முன்வைத்துதான் பிரச்சாரங்களை விரிவுபடுத்தினார் திருமாவளவன். இந்த முறையும் சனாதனத்தை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்துடன் தயாராகி வருகிறார்.

ஆனால், கடந்த காலங்களை போல அல்லாமல், தலித் வாக்குகளை பாஜகவால் இந்த முறை பெற முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது. காரணம், நேற்றைய தினம்கூட, கும்பகோணத்தில், அம்பேத்கர் காவி சட்டை மற்றும் நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்திருப்பது போன்ற போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், தலித் வாக்குகளை கவருவதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

2 வருடங்களுக்கு முன்பு திருமாளவன் 2 கேள்விகளை தன்னுடைய அறிக்கையில் கேட்டிருந்தார். “சகோதரர் எல்.முருகன் அவர்களை பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக நியமித்தது, அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவா? அல்லது கட்சியை வழிநடத்தும் தலைமைக்குரிய தகுதி படைத்தவர் என்பதற்காகவா? இதுபற்றி பாஜக விளக்கம் தருமா?

தனது இறுதிமூச்சுவரை சாதியத்தை/இந்துத்துவத்தை/ சனாதனத்தை /மூர்க்கமாக எதிர்த்த முரட்டுப் போராளி புரட்சியாளர் அம்பேத்கர் எதிர்ப்பின் உச்சமாக இந்து மதத்தைவிட்டு பல இலட்சம் பேரோடு வெளியேறியவர். அவரை எதிர்க்கத்தானே வேண்டும்? ஆதரிப்பது ஏன்? பாஜக விளக்குமா?” என்ற 2 கேள்விகளை திருமாவளவன் முன்வைத்தும், இதுவரை அதற்கு பாஜக தரப்பில் பதில் எதுவும் தரப்படவில்லை.

இளையராஜா விவகாரம்

அதேபோல, இளையராஜா விவகாரம் வெடித்து கிளம்பியபோது, அந்த விஷயத்தை சாந்தப்படுத்தியதே திருமாவளவனின் பேச்சுக்கள்தான். “சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்எஸ்எஸ்ஸின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம்.. நான் இரக்கம் காட்ட விரும்புகிறேன்” என்று முதல் நபராக ஆதரவு தந்து, பாஜகவின் அரசியலை வெளிப்படுத்தியிருந்தார்.

5 ஆவது முறையாக தேசிய விருது பெறும் இசைஞானி இளையராஜா

நேற்றுகூட திருமாவளவன் பேசும்போது, “அம்பேத்கர் நினைவுநாளில், தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து இங்கு அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தியிருந்ததை தமிழக மக்கள் கண்டுகொள்ளவேயில்லை என்று பதிலடி தந்து, பாஜகவின் தலித் அரசியலுக்கு இன்னொரு வேட்டு வைத்திருந்தார்.

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மதவாதிகளின் பேச்சுக்கள், போன்றவற்றுக்கு, இப்படி பதிலடிகளை தந்து வருவது திருமாவளவன் என்பதால், அவரது முயற்சி ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு பெரும் நிம்மதியை தந்து வருவதை மறுக்க முடியாது. ஆனால், திமுக கூட்டணிக்கு அடித்தளமாக விளங்கி கொண்டிருக்கும், விசிகவின் தலித் வாக்கு வங்கியை குலைத்து, அதை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியையும் பாஜக விடாமல் எடுத்து வருகிறது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்த விடாமல் செய்து, திமுகவுக்கு மறைமுகமாக திருமாவளவன் உதவிய கோபமும் பாஜகவுக்கு இல்லாமல் இல்லை. அதேசமயம், திமுகவை சாடுவதைவிட திருமாவளவனை சாடும் போக்கு, தமிழக பாஜகவில் அதிகரித்தபடியே வருகிறது. தலித் வாக்குகள் தங்களுக்கு கிடைப்பதைவிட, விசிகவுக்கு கிடைத்துவிட கூடாது என்ற போக்கும் அதிகமாக காண முடிகிறது.

அம்பேத்காருக்கு காவி சாயம்

இதுமட்டுமல்லாமல் தேசத்துக்கே சொந்தமான அம்பேத்காரை சாதி அடிப்படையில் ஒரு சில கட்சிகள் தங்களுடைய அடையாளமாக பயன்படுத்தி வருவதையும் பலரும் சமீப காலமாக கண்டித்து வருகின்றனர். அந்தவகையில் அம்பேத்காருக்கு காவி சாயம் பூசியதை அவரை  வைத்து வாக்கு சேகரிக்கும் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான அரசியலாகவும்,அதை தங்கள் பக்கம் திருப்பி விடும் அரசியலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அம்பேத்கருக்கு காவி உடை, விபூதி, குங்குமம்.. சர்ச்சை போஸ்டர் ஒட்டிய இந்து  மக்கள் கட்சி நிர்வாகி கைது!

தலித் வாக்குகளை பெறுவதற்காக, அம்பேத்கருக்கு காவி சாயம் பூசியதைபோல, இன்னும் எத்துணை முயற்சிகளை பாஜக மேற்கொண்டாலும், அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து கொண்டு, எச்.ராஜா, சுப்பிரமணியசாமி போன்றோரின் குரல்கள் பீறிட்டு எதிரொலித்து விடுகின்றன என்பதே இங்கு நிதர்சனம்.

author avatar
Parthipan K