மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் திருமாவளவன்? ஸ்டாலின் காரணமா? சந்தேகத்தை கிளப்பிய பாஜக பிரமுகர்
சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.ஏற்கனவே இந்து கோவில்கள் குறித்து இவர் பேசிய பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் மத பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தற்போது இவர் பேசியுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது அந்த சர்ச்சைக்குரிய பேட்டியில் அவர் கூறியதாவது” இந்து சனாதன தர்மத்தின் படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்றும்,ஆண்களுக்கு அவர்கள் அடிமைகளாக தான் கடவுள் படைத்துள்ளார் என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று கூறிய நிலையில் இந்து மதத்தை பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்றும், இவர் தமிழகத்தில் மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறாரா? என்றும், இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் துணை போகிறாரா? என்ற வகையிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி சந்தேகத்தை உண்டாக்கியுள்ளார் பாஜகவை சேர்ந்த நிர்மல் குமார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவரான நிர்மல் குமார் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது” தன்னை கிறிஸ்தவர் என கூறிக்கொள்ளும் திருமா இந்துப் பெண்களை அவதூறாக பேசி மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கிறாரா? திருமா போன்ற அடிவருடிகளை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறாரா ஸ்டாலின்? ” என்றும் அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னை கிறிஸ்தவர் என கூறிக்கொள்ளும் திருமா இந்துப் பெண்களை அவதூறாக பேசி மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கிறாரா?
திருமா போன்ற அடிவருடிகளை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறாரா ஸ்டாலின்?#பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா pic.twitter.com/1knK4YuOp9
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 23, 2020
மேலும் அவர் மேடைக்கு ஒரு பேச்சு… தினம் ஒரு கொள்கை… கருப்பர் கூட்டம், திருமா போன்ற போலி ஆட்களை வைத்து இந்து பெண்களை தரைகுறைவாக பேச திமுக பின்னாலிருந்து செயல்படுகிறதா? என்றும் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.
மேடைக்கு ஒரு பேச்சு…
தினம் ஒரு கொள்கை…கருப்பர் கூட்டம், திருமா போன்ற போலி ஆட்களை வைத்து இந்து பெண்களை தரைகுறைவாக பேச திமுக @arivalayam பின்னாலிருந்து செயல்படுகிறதா?#பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா pic.twitter.com/ZS2u1YS47z
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 23, 2020
மேலும் பெண்களுக்காக குரல் கொடுக்க கூட கனிமொழி பாரபட்சம் காட்டுகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
என்ன செய்து கொண்டிருக்கிறார் @KanimozhiDMK மற்றும் இதர பெண்ணியவாதிகள் திருமாவளவன் போன்ற ஆட்களுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை…
பெண்களுக்காக குரல் கொடுப்பதில் கூட பாரபட்சமா?@gayathriraguram @khushsundar@krithikasivasw @Padmaavathee#பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா pic.twitter.com/n5BOGxUlF8
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 23, 2020
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது” என்ன செய்து கொண்டிருக்கிறார் கனிமொழி மற்றும் இதர பெண்ணியவாதிகள் திருமாவளவன் போன்ற ஆட்களுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை… பெண்களுக்காக குரல் கொடுப்பதில் கூட பாரபட்சமா? என்றும் பதிவிட்டுள்ளார்.