சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

0
84

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு என்னவென்றால் ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் கவிழ்க்கலாம்? என்னென்ன விதத்தில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம்? என்று முட்டி மோதிக்கொண்டு சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக பெரியாரின் நாத்திக அதாவது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக செயல்படுகிறது, ஆகவே கடவுள் நம்பிக்கையை தாக்கி அவர்கள் பல இடங்களில் உரையாற்றி வருகிறார்கள் இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பெரிய உதாரணம்.

அதேநேரம் இந்தியாவின் சிறுபான்மை மதத்தினராக இருக்கும் கிறிஸ்துவர் மற்றும் இஸ்லாமியர்களின் தமிழக காவலனாக தன்னை காட்டிக் கொள்கிறது திமுக. ஆனாலும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக தெய்வ நம்பிக்கை, இந்து மதம் தர்மம், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே அடிப்படை சித்தாந்த அளவிலேயே இருந்து கட்சிகளுக்கும் முரண்பாடு இருக்கின்றன.

பல விவகாரங்களில் திமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பலவிதமான கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் திமுக மீது பொதுமக்களுக்கு கடும் கோபம் வந்துவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதன் காரணமாக தான் அவர்களும் திமுக சார்பாக நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானங்கள், கோரிக்கைகள், என்று எதையுமே கண்டு கொள்ளவில்லையாம்.

அதேநேரம் மத்திய அரசை மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தான் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலாக ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றது. பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட காணொளி கூட்டத்தில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டது பிரதமர் நரேந்திரமோடியை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியதாம்.

இந்த சிக்கலெல்லாம் போதாதென்று குடியரசு தின விழா வாழ்த்து அறிக்கையில் தமிழக ஆளுநர் ரவி நீட் தேர்வின் சிறப்பை சுட்டிக்காட்டி உரையாற்றியிருப்பதும், பல மொழிகளை தமிழக மாணவர்கள் கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதும், திமுகவை கோபம் கொள்ள வைத்திருக்கிறதாம். இதன் காரணமாக ஆளுநரின் செய்கையை பெரியண்ணன் வேலை என்று முரசொலி நாளிழின் மூலமாக சுட்டிக்காட்டியிருக்கிறது திமுக.

இப்படி தொடர்ந்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், இடையே முட்டல், மோதல், அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், திமுக அரசின் அடி மடியில் கை வைக்கும் விதமாக ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கின்றதாம் பாஜக அரசு. அதாவது மாநில அரசுகளின் ஒப்புதல் எதுவுமின்றி மத்திய அரசின் பணிகளில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்யும் மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் வழியாக எவ்வாறு திமுக அரசுக்கு நெருக்கடி வழங்கிட முடியுமென்றால், தமிழ்நாட்டில் கடந்த 8 மாத காலங்களில் ஒரு சில விவகாரங்கள் தவிர பொதுவாக நல்ல பெயரைத்தான் எடுத்து வருகிறது ஸ்டாலினின் திமுக அரசு. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள்.

பொதுமக்களின் நன்மதிப்பை ஏற்கனவே பெற்ற இறையன்பு தலைமை செயலாளராகவும், சைலேந்திரபாபு தமிழக காவல்துறை இயக்குனராகவும், இருந்து வருகிறார்கள். இவர்களைப் போல இன்னும் சில உயரதிகாரிகள் தமிழக அரசின் தூண்களாக இருந்து பொதுமக்களுக்கான திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களுடைய உதவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தான் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை வகுத்து இருக்கிறதாம் மேலே கூறியது போல முக்கிய அதிகாரிகளை டெல்லிக்கோகோ அல்லது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கோ பணி மாறுதல் செய்திடும் திட்டத்தில் மத்திய அரசு முழுமூச்சில் இறங்கியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பாஜக யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது என கூலாக பதில் சொல்லி செல்கிறதாம்.