அர்ஜுன மூர்த்தி பின்னால் இருந்து இயக்கும் பாஜக!

0
112

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் வாக்குகள் திமுகவிற்கு சென்று விடக்கூடாது என்பதை மனதில் வைத்து அர்ஜுன மூர்த்தியை பாஜகதான் மறைமுகமாக இயங்கி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அண்மையில் கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் ரஜினிகாந்த். இதனை நம்பி அவருடைய ரசிகர்களும் ரஜினிகாந்தின் அறிவிப்பதற்காக காத்திருந்தார்கள். அவர் அறிவித்தபடியே கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த். பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அர்ஜுன் மூர்த்தியை அவருடைய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து அறிவித்தார் ரஜினிகாந்த்.

அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் ரஜினிகாந்த் அங்கிருந்து திரும்பி வந்த பிறகு கட்சியை தொடங்கவில்லை என்னை மன்னியுங்கள் என்று தெரிவித்தார். அதோடு தன்னுடைய ரசிகர்கள் எந்த கட்சியில் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ அங்கே சென்று சேர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தின் நான்கு மாவட்ட செயலாளர்கள் எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அந்த கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்களின் கவனம் திமுக பக்கம் திரும்பியிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மையமாக வைத்து தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாஜகவின் கனவை நொடிப்பொழுதில் கலைத்துவிட்டார் ரஜினிகாந்த். அதோடு அவருடைய ரசிகர்கள் திமுகவிற்கு செல்வதை தடுப்பதற்காகவே அர்ஜுன மூர்த்தியை பாஜக மறைமுகமாக இயக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

எந்த வழியிலும் ரஜினிகாந்த் ரசிகர்களை வைத்து அவர்கள் மூலமாக எதிர்க் கட்சியான திமுக லாபம் பார்த்து விடக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதன் காரணமாகவே ரஜினி இல்லை என்றால் என்ன அவருடைய ரசிகர்களை ஒன்றுதிரட்டி அவர்களுடைய வாக்கை தன்னுடைய அரசியல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக முடிவு செய்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகிறார்கள்.