அரசியல் அறிவில்லாத அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்? கடுமையாக சாடிய ஆர் எஸ் பாரதி!

0
77

திமுக ஆட்சியைக் கலைப்பதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவிப்பது அவருடைய அரசியல் அறிவிண்மையை காட்டுவதாக இருக்கிறது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உரையாற்றும்போது கொடநாடு வழக்கு குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடையும் ஆத்திரம் அவர் குற்றம் செய்தது போல தெரிகிறது. இதனை மக்களும் உணர்ந்து இருக்கிறார்கள். வழக்கு முடியும் சமயத்தில் மறுபடியும் விசாரணை ஆரம்பிக்கலாம் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது. அது கூட தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற ஒரு வழக்கு ஏற்கனவே இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

நாற்பது வருடங்களுக்கு பின்னர் சட்டசபை மிக ஆரோக்கியமான மன்றமாக நடந்து வருகின்றது. சட்டசபை தற்போதுதான் சபையாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் புதுவிதமான அரசியலை நான் காண்கிறேன். ஜனநாயக படி சட்டசபை நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலையை வைக்கக்கூடாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று தெரிவிக்கிறார் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை என கூறியிருக்கிறார் ஆர் எஸ் பாரதி.

ஒரு மாநில ஆட்சியை யாராலும் கலைத்துவிட இயலாது என்று சட்டம் இருக்கின்ற சூழ்நிலையில், பாஜகவின் தலைவர் அண்ணாமலை இவ்வாறு தெரிவித்திருப்பது அவர் அரசியலில் ஒரு அரைவேக்காடு என்பதை காட்டுவதாக சொல்லியிருக்கிறார் ஆர் எஸ் பாரதி. இவருக்கு எப்படி ஐபிஎஸ் வேலை கொடுத்தார்கள் என்ற சந்தேகமும் எழுவதாக சொல்லியிருக்கிறார்.

பாஜக தலைமை எவ்வளவு அரசியல் அறிவு இல்லாதது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.. சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு சர்ச்சைக்குரிய வீடியோ உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக விநாயகர் சிலை குறித்த கருத்தை வெளியிட்டு வருகிறார்க.ள் திசைதிருப்புவதற்காக தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படுத்தி விடவே இதைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் என அவர் கூறியிருக்கிறார்.