கோட்சேவை புகழ்ந்த முக்கிய கட்சியின் தலைவரால் சர்ச்சை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!

0
72

மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஆந்திர மாநிலத்தின் பாஜகவின் மூத்த தலைவர் ட்வீட் செய்தார்.

இதை தொடர்ந்து, அவர் மீது அந்த கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது.

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஒரு சிலர் கூறும் காரணத்தால், அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு.

அதேபோல நேற்றைய தினம் நவம்பர் மாதம் 15ஆம் தேதி கோட்சேவின் நினைவு நாள். இந்த நாளில் ஆந்திரப்பிரதேச பாஜகவின் மூத்த தலைவர் நாகோத்து ரமேஷ் நாயுடு, கோட்சே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

அவர் நேற்று தன்னுடைய வலைதள பக்கத்தில் இன்று அவருடைய நினைவு தினம் நாதுராம் கோட்சேவுக்கு நான் மிகவும் நன்றியுடன் வணக்கம் செலுத்துகின்றேன்.

கோட்சே உண்மையான மற்றும் இந்திய பூமியில் பிறந்த மிகப் பெரிய தேச பக்தர் என பதிவு செய்து இருந்தார்.

அந்த பதிவை அனேக இணையதள வாசிகள் பகிர்ந்து இருந்தார்கள்.

அந்த பதிவிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தன்னுடைய கணக்கை கையாள்பவர் தான் கோட்ஸேவை புகழ்ந்து இதுபோல் பதிவிட்டு இருக்கிறார் என்று நாயுடு விளக்கம் அளித்திருந்தார்.

கோட்சேவை தேசபக்தர் என அழைத்ததற்கு அவருடைய பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கின்றது.

அதேநேரம், நேற்று முன்பாக இந்து மகா சபா கோட்சே மற்றும் கூட்டு சதிகாரர் நாராயண் ஆப்தே ஆகியோருடைய 71ஆவது நினைவு நாளை அனுசரித்தால் என்று தெரிவிக்கப்படுகிறது.