உடைகிறதா கூட்டணி? பாஜக தலைமை தெரிவித்த சர்ச்சை கருத்து!

0
56

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்தது என்னவென்றால், தேசிய கல்விக் கொள்கை தேவை என்று ஐம்பது லட்சம் கையெழுத்து பெறப்பட்டிருக்கின்றனர் . புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். திமுகவினர் நடத்திவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், மும்மொழிக் கொள்கை தான் இருக்கின்றன இதன் மூலமாக திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது என்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் அந்த சமயத்தில் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர் இதற்கு பதில் தெரிவித்த அவர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. எங்களுடைய கூட்டணி வலிமையானது என அவர் தெரிவித்தார். அதிமுக மற்றும் பாஜக இடையே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், அதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது அந்த கேள்வியை தவிர்த்து விட்டார் முருகன் கூட்டணி தொடர்கின்றது என்பதை மட்டும் தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார்.

கடந்த 27ஆம் தேதி சென்னை ஒய் .எம் .சி மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியை சார்ந்த கே.பி .முனுசாமி கூட்டணி ஆட்சிக்கே இடமே கிடையாது என்று உறுதியாக தெரிவித்தார். போதாக்குறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதையே தெரிவித்திருக்கின்றார். இவ்வாறு இருக்க பாஜகவின் மனநிலை என்ன என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனாலும் அவர்கள் தங்களுடைய நிலை என்ன என்பது தொடர்பாக வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்க நெருங்க எங்கே பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணி உடைந்து விடுமோ என்கின்ற பின்பம் தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. கூட்டணி ஆட்சி கிடையாது என்று பகிரங்கமாக அதிமுக தெரிவித்திருந்த நிலையிலே, பத்திரிக்கையாளர்கள் கேட்டால் மட்டும் எங்கள் கூட்டணி தொடர்கின்றது எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று இரு கட்சியினரும் பரஸ்பரம் தெரிவித்து விடுகிறார்கள். ஆனாலும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான சர்ச்சை நீண்டு கொண்டே தான் செல்கின்றது.

இவ்வாறு இருக்க இதற்கு பாஜகவும், அதிமுகவும், என்னதான் தீர்வு காணும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் தமிழகத்தில் பாஜகவிற்கு போதிய அளவுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும் இப்பொழுது அதிமுகவிற்கு மக்களிடம் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கின்றது. அதேசமயம் டெல்லியின் ஆதரவு இருந்தால் சற்று நன்றாக இருக்கும் என்பதில் அந்தக் கட்சியினர் உறுதியாக இருக்கிறார்கள். ஆனாலும் கூட்டணி ஆட்சி என்பதை அதிமுக விரும்பவில்லை என்று தெளிவாக தெரிகின்றது.

நிலைமை இவ்வாறு இருந்தால், வரும் தேர்தல் வரை பாஜக மற்றும் அதிமுகவின் கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகம்தான். அப்படி கூட்டணி உடைந்தால் அது எதிர்க்கட்சியான திமுகவிற்கு எந்த அளவிற்கு பலம் சேர்க்கும் என்பது தெரியவில்லை. என்னதான் பொதுமக்களிடம் நற்பெயர் வாங்கி வைத்திருந்தாலும் இந்த கூட்டணி என்பது உடைந்தால் அது அதிமுகவிற்கு ஒரு பலவீனமாகவே ஆகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள் பொதுவானவர்கள்.