தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

0
52

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு சில கட்டளைகள் ரஜினிகாந்திற்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. முதலில் நீங்கள் கட்சியை தொடங்கி விடுங்கள் அதன்பிறகு எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் அதுவரை உங்கள் வேலைகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொன்னதாக தெரிகின்றது.

ரஜினி பாஜகவை பற்றி எதையுமே தெரிவிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் என்று சொல்கிறார்கள். ஆம் தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரையில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை, அவர்கள் மீது தமிழக மக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு இருந்து வருகின்றது என்பது, அனைவரும் அறிந்ததே. அதன் காரணமாகவே, ரஜினி அமைதியாக இருந்து வருகின்றார். காலம் கனியும் போது அவர் ஒரு முக்கிய முடிவை எடுக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.

அதேபோல ஆளும் தரப்பான அதிமுக, மற்றும் பாஜக கூட்டணி என்பது 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டது. அதிலிருந்தே பாஜக மற்றும் அதிமுக இடையே எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனாலும் சமீப காலமாக தேர்தல் நெருங்க நெருங்க ஒரு சில பிரச்சனைகள் எழுவதும், பின்பு அது முடிவதும் ஆக இருந்து வருகின்றது. கூட்டணி தொடர்பாக பகிரங்கமாக அதிமுக அறிவித்திருந்தாலும் கூட அவ்வப்போது பாஜகவின் மாநில தலைமை அதிமுகவை சீண்டி கொண்டு தான் இருக்கின்றது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி அவர்கள் தான் எங்கள் தலைமையிலிருந்து வருகிறார்கள். முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் தான் அறிவிப்போம் என்பது போன்ற பாஜகவின் கருத்துக்கள் அதற்கு சான்று ஆகிப் போயின.

ஆனாலும் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு அதிமுக பாஜகவின் தேசிய தலைமையுடன் ஒருவித ஒற்றுமையுடன் இருந்து வருவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் இவர்களுடைய திட்டம் தான் என்ன என்று யோசித்தால், தமிழகத்திலே பாஜகவிற்கு போதிய வரவேற்பு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் எதிர்வரும் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் இந்த கூச்சலும் குழப்பமும் என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விஷயமறிந்தவர்கள்.

இப்பொழுது இருக்கும் சூழலில் பாஜகவிற்கு அடிபணிந்ததை போல காட்டி விட்டு பின்பு அதிகாரம் நம்முடைய கைக்கு வந்த பிறகு அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஆளும் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த விஷயமானது பாஜகவிற்கும் தெரியும் என்று சொல்கிறார்கள். பாஜகவும் கூட எப்படியேனும் தமிழகத்தில் நாம் கால் பதித்தால் போதும் என்கின்ற தீராத தாகத்துடன் இருந்து வருகின்றது. அதன் காரணமாக இவ்வாறு சில முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள். நடப்பதையெல்லாம் பார்த்தால் எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.