தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக எடுக்கும் அதிரடி வியூகம்

கடந்த முறை பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்தது முதல் பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய ஆட்சியை ஏற்படுத்த அக்கட்சி முயற்சித்து வருகிறது.

இவ்வாறு பாஜக ஆளாத மற்ற மாநிலங்களிலும், அக்கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சியில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில், கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக இருந்த குமாரசாமியின் அரசு கலைக்கப்பட்டு, அங்கு, பாஜக தலைமையிலான அரசு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  தமிழகத்திலும் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த சாதகமான சூழ்நிலையில் பாஜக தங்களை தமிழகத்தில் வளர்த்து கொள்ள திட்டமிட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு தான் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து போட்டியிட்டது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தாலும் தமிழகத்தில் படு தோல்வியை தழுவியது. இதற்கு பாஜக மீதான தமிழக மக்களின் எதிர்ப்பு தான் என்று காரணமாக கூறப்பட்டாலும் அது எந்த அளவுக்கு உண்மை என்பதை கணிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு எதிராக திமுக எடுத்த பிரச்சார யுக்தி தமிழக மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளது. மேலும் திமுக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில அளிக்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது கடைசியாக நடந்து முடிந்த வேலூர் தேர்தல் முடிவே இதனை உண்மை என்று உறுதி செய்யும்.

மக்களவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு ஓரளவு நம்பிக்கையை கொடுத்தாலும், இந்த வேலூர் தேர்தல் முடிவு அவர்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக இதனை சாதகமாக எடுத்து கொண்டு அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, பலமான கூட்டணி அமைக்கவும், ரஜினியை, தமிழக, பா.ஜ., தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிப்பதற்கான காய் நகர்த்தும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணியை அமித் ஷா துவக்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் நடந்த, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், ரஜினி கலந்து கொண்டார். அதன் பின்னர் அவரிடம் பேசிய அமித் ஷா பாஜகவில் ரஜினி மக்கள் மன்றத்தை இணைத்து விடுங்கள். அதற்காக உங்களை, தமிழக பாஜக தலைவராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினியிடம் பேசிய அமித்ஷா தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிதாக கட்சி தொடங்குவதற்கு பதில் பாஜகவில் இணைந்து விடலாம் என தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Copy
WhatsApp chat