காவல்துறையை மிரட்டும் கூட்டங்கள்! அண்ணாமலை சாடல்!

0
63

தமிழகத்தின் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கோயமுத்தூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த நேரத்தில் அவர் தெரிவித்ததாவது, ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும் ஒரு குழுவாக இணைந்தால் காவல்துறையை மிரட்டி விட இயலும் என்று நினைக்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் பிரதமரை தவறாக பேசி ஊர்வலம் சென்றார்கள் ஆனால் அந்த சமயத்தில் காவல்துறை அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்க வேண்டும். காவல்துறையினர் உறுதியாக இருந்திருந்தால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டு இருக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

அதுபோல பிஹார், தெலுங்கானா, போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் விரும்பும் ஒரு கட்சியாக பாஜக இருக்கிறது எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதனை நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம் ஏனென்றால் நாங்கள் தான் அவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்து இருக்கிறோம். அதன் காரணமாக தான் ஒரு சில அமைப்புகள் தற்சமயம் வரையில் பயந்து கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்வதும், பிரதமரை விமர்சனம் செய்வதும் , தவறு இல்லை. ஆனால் எல்லாமே ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். கோயமுத்தூரில் அந்த வரையறையை மீறி விட்டார்களோ என்ற என்ன தோன்றுகிறது. தேர்தல் சமயத்தில் காவல்துறையினர் எப்படிப்பட்ட அழுத்தத்திற்கும் பணியாமல் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.