பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?

0
148
#image_title
பாஜக-விடம் மொத்தம் 14 இருக்கிறது! சரியத் தொடங்கிய பாஜக.?
இந்தியாவில் ஆட்சி செய்து வரும் பாஜக கட்சியிடம் தற்போது வரை 14 மாநிலங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற கட்சிகள் அனைத்தும் பாஜக சரியத் தொடங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றது.
கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த  தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து பாஜக கைவசம் இருந்த மேலும் ஒரு மாநிலம் காங்கிரஸ் கைவசமானது. 2017ம் ஆண்டு பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜக கட்சியின் ஆட்சி இருந்தது. இது குறுகி குறுகி 14 மாநிலமாக குறைந்துள்ளது. பெரும்பாலும் கிழக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மட்டும் தான் பாஜக கட்சியின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றது. தெற்கில் புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதை அடுத்து வேறு எந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சி இல்லை. தற்போது பாஜக கட்சியிடம் ஹரியானா, உத்தரகண்ட், குஜராத், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், மணிப்பூர், நகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உள்ளது.