மாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?

0
75

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பீர்பூம் சம்பவம் தொடர்பாக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்குலி உரையாற்றினார். அப்போது பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று உரையாற்றினார் ரூபா கங்குலி.

காவல்துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை அவர்கள் தீ வைத்து எரிக்க படுவதற்கு முன்னால் மிக கடுமையாக தாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிரேத பரிசோதனையின் அறிக்கை சொல்கிறது. மாநிலத்தில் மற்றுமொரு அரசியல் படுகொலை சம்பவம் இது என தெரிவித்திருக்கிறார் ரூபா கங்குலி.

மேற்குவங்க மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது ஆனாலும் அந்த மாநில மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பான இடமாக இல்லை ஆகவே மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரிக்கை வைக்கிறேன். எங்களுக்கு வாழ்வதற்கு உரிமையுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு மேற்கு வங்கத்தில் பிறந்தது எங்களுடைய குற்றமல்ல என தெரிவித்தபடி அவர் கண்ணீர் விட்டு அழுதார். அதன்பிறகு அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு 8 பேர் கொல்லப்பட்ட பிறகு அந்த பகுதியில் வசித்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ரூபா கங்குலி உரையாற்ற தொடங்கியவுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பினார்கள் சிலர் அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர் பாஜகவை சார்ந்த உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷமிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

பின்பு அவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர் இதன் காரணமாக, அவை 25 நிமிடங்களுக்கு அவர் ஒத்திவைத்தார்.