திமுகவின் முகத்திரையை கிழித்து எறிந்த பாஜக பெண் நிர்வாகி!

0
85

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள் .இதன் காரணமாக, தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது. இந்த நிலையில், எதிர்க் கட்சியான திமுகவின் தலைவர் ஸ்டாலின் தொடங்கி அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வரை கையில் வேலுடன் ஒரு புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாகி இருக்கின்றது

இந்த புகைப்படம் இதுதொடர்பாக பாஜக நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம் தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிற பதிவில், அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலுடன் போஸ் கொடுத்து பொது மக்களை மூடிடலாக்கினார் . இன்று அவருடைய மகன் உதயநிதி கையில் வேலை வைத்துக்கொண்டு நாடகமாடி வருகிறார். ஆகவே இந்து மக்களாகிய நீங்கள் அனைவரும் தெளிவாக இருங்கள், புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள், இவர்களைப் போன்றவர்கள் இன்னும் எத்தனை வேடத்தை போட்டாலும் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது இந்து மதத்தின் விரோதிகளை விரட்டியடிப்போம் என்று பதிவு செய்திருக்கிறார்.

எப்பொழுதும் சிறுபான்மையினர் மத்தியில் திமுகவைச் சார்ந்த ஸ்டாலின் முதல் கொண்டு அந்தக் கட்சியின் தலைவர்கள் அனைவருமே இந்து மதத்தை இழிவு செய்யும் வேலையை தான் இதுவரையில் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் மற்றும் பாமர மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற காரணத்திற்காக, இதுபோன்ற சில விளையாட்டுகளை திமுக தரப்பினர் செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனை பார்த்து விவரமற்ற பாமர மக்கள் அனைவரும் ஏமாந்து போய் ஓட்டுக்களை போட்டு விடுகிறார்கள். ஆனால் அதன் பிறகு ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் செய்யும் சித்து விளையாட்டுக்கள் ஏராளம் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் சாதியின் பெயரை வைத்துக்கொண்டு கலவரம் செய்யும் திருமாவளவன், கி வீரமணி, போன்றவர்களை தன்னுடைய கூட்டணியில் வைத்துக்கொண்டு சமயத்துக்கு ஏற்றவாறு அவர்கள் மூலம் கலவரம் செய்து தன்னுடைய அரசியல் ஆளுமையை தமிழகத்தில் நிலை நிறுத்தி வருகிறது திமுக, என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

ஆனால் அந்தக் கட்சியின் விஷமத்தனத்தை எல்லாம் அறியாத பாமர மக்கள் அனைவரும் திமுகவை பேரறிஞர் அண்ணா இருந்த காலத்தில் இருந்த திமுக என்று இன்று வரையில் நினைத்து வருகிறார்கள். ஆனால் தற்சமயம் திமுகவின் தலைமை மட்டுமல்ல அவருடைய கொள்கைகளும் மாறி விட்டன என்பது பாவம் அந்த பாமர மக்களுக்கு தெரியாமல் போயிற்று.

இப்படி எதையும் அறியாத பாமர மக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்து ஒரு சில சித்து விளையாட்டுகளை நடத்தி அவர்களுடைய ஓட்டின் மூலம் ஆட்சியை பிடித்து அதன் பிறகு இவர்கள் செய்யும் வேலைகள் என்னென்ன என்பதற்கு, கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுகவின் ஆட்சி காலத்தில் நடந்த ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டாக அமைகிறது.

ஆனால் அதைப் பற்றி வெளியில் விசாரித்தால் அது அப்பொழுது இது இப்பொழுது என்று சொல்வதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியே பார்த்தாலும் கடந்த 2009ஆம் வருடம் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடைபெற்ற போரின் பொழுது கொத்துக்கொத்தாக ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை அப்போது இருந்த மத்திய காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் இருந்த திமுக அரசும் வேடிக்கை தான் பார்த்ததே ஒழிய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏதோ பெயருக்கு உண்ணாவிரதம் என்று சுமார் ஒரு வாரகாலம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு போராட்டத்தை நடத்தி விட்டு எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். ஆனால் தன்னுடைய கட்சியினருக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கேட்டு அடிக்கடி டெல்லி சென்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை சந்தித்த கருணாநிதிக்கு ஒரு முறை கூட ஈழத்தமிழர்களின் படுகொலை தொடர்பாக அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ, அல்லது கண்டனம் தெரிவிப்பதற்க்கோ தைரியம் வரவில்லை.

இப்படி எண்ணற்ற நிகழ்வுகளும் கொலை கொள்ளை போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இதையெல்லாம் தற்போது மக்கள் மறந்து விட்டார்கள் என்ற தைரியத்தில் மேடைக்கு மேடை திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் பேசி வருகிறார்கள். ஆனால் அப்போது நடந்த எதையும் தற்போது வரை தமிழக மக்கள் மறக்கவில்லை அவர்களுடைய அடிமனதில் பொக்கிஷமாக மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பது எதிர்வரும் தேர்தலில் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்களும் , சமூக ஆர்வலர்களும்.