உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபடும் முக்கிய கட்சி!

0
82

தமிழ்நாட்டில் சென்ற 2016 ஆம் வருடம் நடக்க வேண்டி இருந்த உள்ளாட்சித் தேர்தல் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதனை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் மற்றும் ஊரக அளவில் தேர்தல் நடைபெற்றது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அந்த தேர்தல் நடைபெற 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பணிகள் பெரிய அளவில் தேக்கம் அடைந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இன்று மாலை அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது.

திமுகவை போல மற்ற கட்சியினரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தங்களை தயார் படுத்திவருகிறார்கள். அதேபோல பாஜகவும் இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றது. சென்னை கமலாலயத்தில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைப் பொறுப்பாளர் சுதாகரன், உள்ளிட்டோரின் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் காணொளி மூலமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் உள்ளாட்சி தேர்தல், பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி பணி, போன்றவை தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.