இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

0
52

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையுமில்லாமல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது.

அதேபோல மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்ததால் அந்தத் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எதையும் வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. ஆனால் இன்று மாலை 6 மணியுடன் மேற்கு வங்க தேர்தல் முடிவடைவதால் இரவு சுமார் ஏழரை மணி அளவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட இருக்கின்றன. ஆகவே இந்த கருத்துக்கணிப்புகளிலேயே கிட்டத்தட்ட வெற்றி பெறப்போவது யார் என்று தெரிந்துவிடும்.

ஆனால் சென்ற 2016 ஆம் ஆண்டு இதேபோன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக அதிமுக மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியது. அதேபோன்று இப்பொழுதும் ஒரு அதிசயம் நடக்குமா என்பதே தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் மையத்தினை பார்வையிட்டு இருக்கிறார்.

அதன் பிறகு தமிழகம் முழுவதிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல பாஜக போட்டியிடுகின்ற 20 தொகுதிகளில் 10 தொகுதிகளிலாவது மாபெரும் வெற்றியை அடைந்து சட்டசபைக்குள் நுழையும் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.