அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

0
52

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுபட்ட இருக்கக்கூடிய அந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த விதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 22 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடங்களில் இரண்டு இடங்கள் காலியாக இருக்கிறது.

இதில் ஒரு வாரத்திற்கு 9ஆம் வார்டில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதவிக்கு ஏற்கனவே திமுகவின் சார்பாக பழனிச்சாமி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அழகு சுந்தரி அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அதேநேரம் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவிலிருந்து சுந்தர் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது.

இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி தெரிவிக்கும்போது. கட்சியின் தலைமை உத்தரவின் அடிப்படையில் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் 9வது வார்டில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட இரு கட்சிகளையும் எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி களம் காண இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது