திமுகவின் ஆட்சிக்கு ஒட்டுமொத்தமாக ஆப்பு வைக்க காத்திருக்கும் அண்ணாமலை! போடும் அதிரடி திட்டம்!

0
53

தமிழ்நாட்டில் திமுக அரசு கமிஷன், கரக்ஷன், கட்டு ,உள்ளிட்ட மூன்றுக்கும் முக்கியத்துவம் வழங்கி செயல்பட்டு வருகிறது என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார். மாநில அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மோடி ஆட்சியில் நடைபெற்ற 7 வருடங்களில் உரத்தட்டுப்பாடு எதுவும் உண்டாகவில்லை. மத்திய அரசு மீது மாநில அரசு புகார் தெரிவிப்பதை தவிர்த்துவிட்டு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை நாடகமாடுகிறது, யாரெல்லாம் கடவுளை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு நம்முடைய நம்பிக்கையின் அடிப்படையில் ஆலயங்களில் நிச்சயமாக இடம் உண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என கூறியிருக்கிறார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. பாரபட்சமின்றி திமுகவின் உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ, அவர்களின் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் காவல்துறை தலைவரை முதல் ஆளாக வரவேற்பது பாஜகதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் திமுக அரசு திட்டங்களில் நடைபெறும் வேலைகள் 20% கமிஷன் பெற்றுக் கொள்கிறார்கள் முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யும் போது 4 சதவீத கமிஷனை பெற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு குடும்பமே ஆட்சி செய்து வருகின்றது, வட்ட செயலாளர், கிளை செயலாளர், என்று ஒருவரும் திமுக களத்தில் பணியாற்றுவது இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து வரும் மிகப்பெரிய ஊழல் தொடர்பாக சற்றேறக்குறைய மூன்று, நான்கு மாதங்களில் தமிழக மக்கள் பேசத் தொடங்குவார்கள் என்று தெரிவித்த அண்ணாமலை, தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பி அடித்து அவற்றை மாநில அரசு திட்டம் என்ற பெயரில் புதிய வடிவில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்துவதற்கான திறன் மாநில அரசிடம் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் அண்ணாமலை.

மத்திய அரசு வருகின்ற 2024 ஆம் வருடத்திற்குள் வீடுதோறும் குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரக்ஷன் செய்துவருகிறது. தமிழ்நாட்டில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் லஞ்சம் முட்டுக்கட்டை போடுகிறது. இதையெல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று அவர் கூறியிருக்கிறார்.