நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

0
86

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏரி, குளம், ஆறு மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது அயல்நாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வதோடு, தனது புது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு பறந்துவிடும்.

இப்படி வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான பறவைகள் வந்து செல்கிறது போன்றவற்றின் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் கலந்துகொண்டு நவீன கேமிரா உதவிகளுடன் புகைப்படம் எடுத்து கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.

பறவைகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் பல்வேறு குழுவாக பிரிந்து பறவைகளின் எண்ணிக்கை கணக்கெடுக்க உள்ளனர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் சதுப்பு நிலப்பகுதியில் பல்வேறு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. இதனை கவனிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் பகுதியில் உள்ள கோடியக்கரை சரணாலயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பறவைகளின் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் இருக்கும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது.

author avatar
Jayachandiran