அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! 

0
122
Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!
Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்!

கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது.

அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதனால் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல் படுத்த தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் கடந்த வாரம் தலைமை செயலாளர் உத்தரவு ஒன்றை பிறபித்தார் அந்த உத்தரவில்  நடப்பாண்டில் நேற்று வருடத்தின் முதல் நாள் என்பதால் கேரளாவின் அனைத்து அரசு அலுவலங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல் படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில்  இன்று முதல் கேரளா அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு அமலுக்கு வந்தது.மேலும் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவிற்கான கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு குறித்து தகவல்களை தலைமை செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வருகை பதிவு முறை நிதித்துறையின் சம்பள பதிவேடுகளில் பதிவாகும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது.மேலும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்குள் வருவதற்கும்,வெளியேறவும் அவர்களின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அலுவலகங்களுக்கு தாமதமாக வந்தாலோ அல்லது அலுவலகத்தில் இருந்து பணி முடியும் நேரத்திற்கு முன்பாக செல்வதற்கும் வாய்ப்பில்லை என அறிவித்துள்ளனர்.

ஊழியர்கள் அவ்வாறு வெளியேறினால் அவர்களின் விவரங்கள் சம்பள பட்டியலில் பதிவாகும்.அதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிலை உருவாகும் என கூறப்பட்டுள்ளது.தற்போது கேரள அரசின் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வந்த இந்த முறையானது தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் குறைவான ஊழியர்களை கொண்டு இயங்கும் அலுவலகங்களில் இந்த முறை அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பித்தக்கது.விரைவில் போலீஸ் நிலையங்கள்,பள்ளி,கல்லூரிகளில் பயோமெட்ரிக் முறை  அமலுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

author avatar
Parthipan K