எதிர்காலத்திலும் இருமொழி கல்வி கொள்கையே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

0
96

எதிர்காலத்திலும் இருமொழி கல்வியே பின்பற்றப்படும் : மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் !!

தமிழகத்தில் இருமொழிக் கொள்கைகளை மட்டுமே பின்பற்றப்படும் என மத்திய அமைச்சருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கை 2020 மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சியும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி இந்த கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

இதற்கிடையே புதிய கல்விக் கொள்கையை பற்றி விவரிக்க ,உயர்கல்வியில் புதிய கல்விக் கொள்கை 2020-ன் பங்கு’ என்ற தலைப்பில் இன்று மாநாடு நடைபெற்றது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கும் நிலையில், காணொலி மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்றார்.

மேலும் ,தேசிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியக்கு ,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .இந்த கடிதத்தில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்றும் அதை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர். எதிர்காலத்திலும் இருமொழிக் கொள்கையை தமிழக அரசு கடைபிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தேசிய அளவில் 1:26 என ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் உள்ள நிலையில் தமிழகத்தில் 1:17 ஆக இருக்கின்றனர். நுழைவுத் தேர்வுகள் மாணவர்கள் ஒரு சுமையாக இருக்கும் என்றும் ,தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்றும் தேசிய நுழைவுத்தேர்வு நடத்துவதை தமிழக அரசு எப்போதும் ஏற்காது என்று அவர் கூறினார்.

கல்விக்கொள்கையின் இலக்கை 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சாதித்து காட்டியுள்ளதை குறிப்பிட்டார். 2035-க்குள் கல்வியறிவு பெற்றவர்கள் சதவீதத்தில் 50 சதவீதமாக உயர்ந்து மத்திய அரசு திட்டமிட்டுள்ள இந்த இலக்கை , 2019-20 ஆம் ஆண்டிலேயே தமிழகம் எட்டி விடும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K