பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இவங்கதான் முன்னிலை! அதிர்ச்சியின் உச்சத்தில் முக்கிய தரப்பு!

0
73

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு என்ன ஆரம்பிக்கப்பட்டன.

பீகார் மாநிலத்தில் இருக்கும் 55 மையங்களில், வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தேர்தலில் பாஜகவின், ஐக்கிய ஜனதா தளத்துக்கும், காங்கிரஸ், ஆர் ஜேடி கூட்டணிக்கும், நேரடி போட்டி நிலவிவருகின்றது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்ஜேடி கூட்டணி தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வருகின்றது.

காலை 9 மணி நிலவரப்படி இந்த கூட்டணி 95 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

ஆனாலும் தொடர்ந்து மூன்று முறை முதல்வர் பதவியில் இருந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஜி டி யு பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மொத்தமாக 16 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்ற நிலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் இருந்து வருகிறது.

ஆனாலும் இந்த கூட்டணிக்கு நெருக்கமான பாஜகவும், ஜெடியூவும்,முன்னிலையில் , இருந்து வருவதால் பிற்பகலில் தான் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பது துல்லியமாக தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.