தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

0
80

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அதன் இரண்டாம் கட்ட தேர்தல் 94 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை தொடங்கியிருக்கின்றது.

பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தவகையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்றைய தினமும் மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் நவம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கின்றது.

அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில் வாக்குச்சாவடிகள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 2.85 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்கள்.

இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில், ஆயிரத்து 463 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக, வாக்குச்சாவடி ஒன்றிற்கு வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரமாக குறைக்கப்பட்டு இருக்கின்றது.

80 வயதிற்கு மேற்பட்டோர், மற்றும் தொற்றின் அறிகுறி இருப்பவர்களுக்கு, தபால் வாக்குப்பதிவு மற்றும் நேர மாற்றுமுறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் மாதம் பத்தாம் தேதி என்ன பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி, ஆகியவை இடையே நேரடிப் போட்டி நிலவுகின்றது.