வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஜய்! சிக்கலில் தனியார் கல்லூரி

0
90
bigil audio launch vijay speech problem
bigil audio launch vijay speech problem

வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஜய்! சிக்கலில் தனியார் கல்லூரி

நடிகர் விஜய் நடித்துள்ள “பிகில்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று சம்பந்தபட்ட தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு  தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் விஜய், தந்தை – மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியான சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் அவர் பேசிய பேச்சுகளுக்கான சர்ச்சைகள் இன்னும் முடியவில்லை. ஆனால் அவரோ என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் என்று இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வெளிநாடு கிளம்பிவிட்டார். 

சர்ச்சைக்கான காரணம்:

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று தமிழக அரசை சீண்டிய விஜய்,  யாரை எங்கே வைக்கவேண்டுமோ அவர்களை அங்கே வைத்தால் இது போல நடக்காது என்று கடுமையாக சாடினார்.

இவர்களுக்கு எதிராக நீங்கள் ஹேஷ்டேக் போடுவீர்கள் என்று நம்புகிறேன். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் போராட வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் தன்னுடைய ரசிகர்களை ஆளுங்கட்சிக்கு எதிராக தூண்டி விடுவது போல பேசினார். நடிகர் விஜய்யின் இந்த கருத்து தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக அமைச்சர்கள் நடிகர் விஜய்யின் இந்த கருத்துக்கு கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்?  என்று  விளக்கம் தர தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசு சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ‘பிகில் விழாவுக்கு எதன் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தது?’ இதற்கு சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இந்த நோட்டீஸுக்கு கல்லுரி நிர்வாகம் என்ன விளக்கம் கொடுக்க  போகிறது என்று தெரியவில்லை.

நடிகர் விஜய் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியதாக கூறும் இந்த விழாவானது சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அங்கு இருக்கும் லியோ முத்து உள்ளரங்கில் இந்த விழா நடந்ததுள்ளது. இதற்கு முன்பே அங்கு மேலும் சில சினிமா பட விழாக்கள் நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் பேசிய விஜய் தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்த நிலையில் கல்வித்துறை நோட்டீஸ்  அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.