மீண்டும் ஆரம்பமாகும் பிக்பாஸ்! ரீ எண்ட்ரி கொடுக்கும் ஜூலி!

0
75
Big Boss to start again! Julie giving re-entry!
Big Boss to start again! Julie giving re-entry!

மீண்டும் ஆரம்பமாகும் பிக்பாஸ்! ரீ எண்ட்ரி கொடுக்கும் ஜூலி!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.அதில் மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் 15 பிரபலங்களை அனுப்புகின்றனர்.

அதன்பின் அவர்களுக்குள் போட்டிகள் வைத்து மதிப்பெண்கள் அடிப்படையிலும்,மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையிலும் வாரம் இறுதியில் ஒருவர் போட்டி களத்திலிருந்து வெளியேருவர்.கடைசியாக நன்கு பேர் மட்டும் இறுதி கட்டத்தை நோக்கி செல்வர்.அந்தவகையில் முதல் சீசனில் கலந்துக்கொண்டவர்களை,இன்றளவும் மறக்காமல் மக்கள் பேசி வருகின்றனர்.

அந்தவகையில் முதல் சீசனில் அதிக அளவு பிரபலமடைந்த ஜூலி,ஓவியா,ஆரவ்,ரைசா பற்றி இன்றளவும் பேசி வருகின்றனர்.தற்போது பிக்பாஸ் 4 நடந்து முடிந்த நிலையில்,ஜோடி சீசனை போலவே புதிய நிகழ்ச்சியாக ரியாலிடி ஷோ விஜய் டிவி தொடங்க உள்ளது.இதில் அனைத்து  சீசன் பிக்பாஸ் பிரபலங்களும் கலந்துக்கொண்டு,சீசன் வாரியாக ஜோடிகள் பிரித்து நிகழ்ச்சி துவங்க உள்ளதாக கூறுகின்றனர்.அதில் ஜூலி,மும்தாஜ்,கேபி,ஆஜித் என பலர் கலந்து கொள்வது தற்போது உறுதியாகியுள்ளது.இந்த நிகழ்ச்சி பெருமளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.இது அடுத்த TRB யை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.