விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?

0
60

ரஷ்யா மற்றும் குழுவினருக்கு இடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது உக்ரைனில் இருக்கும் தீபகற்பத்தை கடந்த 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறது.

இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமானால் அமெரிக்க நேட்டோ படைகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்ததோடு உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு சில நாடுகள் ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேசமயம் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்கும் எண்ணமில்லையென்று ரஷ்யா கூறி வருகிறது. ஆனாலும் பெலாரசுடன் இணைந்து ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு நடுவில் சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தவுடன் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் கூறியிருக்கிறார். வான்வெளி தாக்குதல் மூலமாக படையெடுப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் நிலைமை மோசமடைந்து வருகிறது என சொல்லப்படுகிறது. உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உள்ளிட்டோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

ரஷ்ய அதிபர் புடின் இன்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசவிருக்கின்ற ஜோ பைடன் உக்ரைனில் போர் பதற்றத்தை தணிப்பதற்காக அதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

உக்ரைன் விவகாரத்தில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.