பைரவரை விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன் என்ன?

0
73

பைரவரை விரதமிருந்து காலையில் வழிபட்டால் சகல நோய்களும் நீங்கும், பகலில் வழிபட்டால் விரும்பியதனைத்தும் கிடைக்கும். மாலை நேரத்தில் வழிபட இதுவரை செய்த பாவங்கள் யாவும் விலகும்.

அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் அனைத்து வளமும் பெருகி மனம் ஒருமைப்பாடும் கிடைத்து முத்தி நிலை என்ற இறை பரம்பொருளான பைரவ பெருமான் கல்வியும், மரணமில்லா பெருவாழ்வும் கூட கிட்டும்
என தெரிவிக்கிறார்கள்.

பைரவருக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணை அகல் தீபத்தை ஏற்றி வழிபட்டு வந்தால் அனைத்து வளமும் அதிகரிக்கும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபமேற்றி வழிபடலாம் என்கிறார்கள். அதேசமயம் பூசணிக்காயை நடுவில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் உள்ளிட்டவற்றை நிரப்பி தீபமேற்றி வழிபடலாம்.

பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், செவ்வாழை, வெள்ளை பாயாசம், அவல் பாயாசம், நெய்யில் போட்டெடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழ வகைகள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு செய்வது மிகவும் நன்று.

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை, அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள் செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் நன்று என தெரிவிக்கிறார்கள்.