அவ்வளவு இளக்காரமா போச்சா ஜாக்கிரதை! தேர்தல் ஆணையம் மீது கடுப்பான விஜயகாந்த்!

0
90

தமிழ்நாட்டில் நகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அதாவது நேற்று ஆரம்பித்து பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதோடு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக விஜயகாந்த் வழங்கி இருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மாநில தேர்தல் ஆணையம் ஜனவரி மாதம் 28ம் தேதியான நேற்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் என ஜனவரி மாதம் 26ஆம் தேதி மாலை அறிவித்தது.

இதற்கு நடுவில் ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது வேட்பாளர்கள் தங்களுடைய முடிவுகளை எடுப்பதற்கு கூட நேரம் வழங்கப்படவில்லை. இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, இதற்கு முன்னால் நடைபெற்ற தேர்தல்களில் எத்தனை நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதோ அதேபோல் தான் தற்போதும் வழங்கப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் விஜயகாந்த்.

அத்துடன் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவில் ஆளும் கட்சியின் தலையீடு இருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது, தேர்தல் அறிவிப்புகளை இவ்வாறு அதிகார துஷ்பிரயோகம் செய்து திமுக எடுத்து வரும் இதுபோன்ற நடவடிக்கைகள் பொதுமக்களை அதிர்ச்சி அடையச்செய்யும், அதோடு எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கினால்தான் வேட்பாளர்கள் அவர்களை தயார் செய்து கொள்ளமுடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.