குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சூப்பரான உணவு வகைகள் !

0
85

பொதுவாக குளிர்காலத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. குளிர்காலம் தொடங்கிவிட்டதால் நமது உடலின் வெப்பநிலையை உயர்த்துவதற்காக நாம் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட தொடங்குவோம், இதன் காரணமாக நமது உடலில் கொலஸ்டராலின் அளவு உயரக்கூடும். கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தாலே நமது உடலில் எந்த மாதிரியான விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது இதயத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

இந்த குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடக்கூடிய செயற்கையான பானங்களும், எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகளும் சாப்பிடுவதற்கு ருசியாக இருந்தாலும் உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவை அதிகரித்துவிடும். இதுபோன்ற உணவு வகைகளுக்கு பதிலாக சில நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் கொலஸ்டராலின் அளவும் அதிகரிக்காது மற்றும் உடலின் வெப்பநிலையும் நன்றாக இருக்கும், குளிர்காலத்தில் உங்கள் உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்திவிடாத சில உணவு வகைகளை பற்றி இங்கே காண்போம்.

1) MUFA அதாவது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் செய்த உணவை சாப்பிடுவது உடலில் கெட்ட கொலஸ்டராலின் அளவை உயர்த்தாது.

2) குளிர்காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் 5 தடவை நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

3) நார்சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது உங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். பச்சை காய்கறிகள், ஓட்ஸ் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது.

4) இந்த குளிர்காலத்தில் உடலின் வெப்பநிலையை சமன்செய்வதற்கும், கெட்ட கொலஸ்டராலின் அளவை குறைக்கவும் வைட்டமின் இ மாத்திரைகளை உட்கொள்ளலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

 

author avatar
Savitha